கோதும்பி நடனம்
ஏப்ரல் 7, 2009இளையராஜாவின் ‘திருவாசகம்’ இசை தொகுப்பில் வரும் ‘பூவேறு கோனும்’ திருவாசக பாடலின் இசை வடிவம் பலமுறை நான் கேட்டு ரசித்த ஒன்று. ஆனால், அதன் காட்சியமைப்பு எப்படி இருக்கும் என நான் யோசித்தது உண்டு. அதற்கு விடையாக ஒரு நடனக் காட்சியை கண்டு மகிழ்ந்து போனேன். அதன் இணைப்பு இங்கே
அழகு குட்டி செல்லம்
ஏப்ரல் 1, 2009உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்குப் பேச தெரியலே
எனக்குத் தெரிந்த பாஷை பேச உனக்குத் தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு ?
கூர்மை
செப்டம்பர் 8, 2008சந்தோஷிப்பவனும், துக்கிப்பவனும் ஒருவரை ஒருவர் சந்தேகித்தனர்.
முட்டாளும், புத்திசாலியும் ஒருவரை ஒருவர் ஏமாற்றினர்.
நல்லவனும், கெட்டவனும் ஒருவரை ஒருவர் மறுத்தனர்.
சுயநலவாதியும், பொதுநலவாதியும் ஒருவரை ஒருவர் கேலி பேசினர்.
எனவே, சொர்க்கம் என்பது இல்லாமல் போனது.
விடுதலை
செப்டம்பர் 6, 2008யாருக்கு ?
செப்டம்பர் 4, 2008நான் என் பேச்சைக் கேட்பதா ?
கடவுளின் பேச்சைக் கேட்பதா ?
குருவின் பேச்சைக் கேட்பதா ?
காலத்தின் பேச்சைக் கேட்பதா ?
விதியின் பேச்சைக் கேட்பதா ?
உலகின் பேச்சைக் கேட்பதா ?
சூழ்நிலையும் சம்பவமுமே
இதைத் தீர்மானிக்கும்
நான் யாருக்கு அடிமையென்பது.
கற்றல்
செப்டம்பர் 1, 2008அழைப்பு
ஆகஸ்ட் 12, 2008பறவை குறித்து கவிதை எழுதுபர்களுக்கு …
ஜூன் 8, 2008போட்டியில் வென்ற கோழிக்கு தங்கத்தில் மெடல் கழுத்தில்
பெருமையில் இங்கும் அங்கும் திரிந்த கோழியைக் கண்ட
சிறப்பு விருந்தினர் ஆசையுடன் சொன்னார்
பசியோடிருப்பவனுக்கு காசு தெரிவது போல
உணவின் ருசியை நேரடியாகச் சுவைக்கத் தெரியாத
பறவை குறித்து கவிதை எழுதுபர்களுக்கு
கோழிக்காலின் ருசி தெரியுமா ?
பன்னீர் புஷ்பம்
ஆகஸ்ட் 28, 2007நான் நீரில் ஒளிர்கின்ற ஒளி
நான் அந்த ஒளியில் ஒளிர்கின்ற பிரம்மம்
பிரம்மம் எனப்படுபவர் நானே
நான் என்பதில் பெருமிதம் அடைகிறேன்
நான் பிரம்மம்
நான் நான்தான்
என்னை நான் ஆஹூதியாக்குகிறேன்
எனது கவிதைகள்
ஆகஸ்ட் 5, 2007கடந்த சில நாட்களாக என் மனதில் தோன்றும் சில கற்பனைகளை இரண்டு வார்த்தை (அ) மூன்று வார்த்தை, மூன்று வரி என்று அடக்கி யோசித்த போது, உருவான கவிதைகள் இவை, இப்போது உங்கள் வாசிப்புக்கு.
இவற்றிற்கு தனியாகத் தலைப்பு ஏதும் இல்லை.
————————————————————-
அடைபட்ட கூண்டில்
சிட்டுக்குருவியின் உற்சாகம்
எனது குழந்தைப் பருவம்
சின்னச் சிகப்பு பறவை
எனக்காகவே கூவியது
அதன் சிறகு உதிர்ந்தது
கோவில் வாசலில்
அமைதியான குளம்
காற்றில் அதிர்ந்தபடி
பரபரப்பான தேனீ
ரோஜாவைச் சுற்றியது
ஒளியில் ஒளிர்ந்தது
காட்டுவெளி எல்லையில்
சந்தோஷ ஆடு
கொளுத்தும் சூரியன்.
இரும்புக் கதவருகே
நாய் சோதிக்கும்
நிழலின் எதிரொலிப்பை
மெல்லிய மழையிலும்
சூரியனைத் தொடரும்
சூரியகாந்தியின் பார்வை
படித்த கவிதைகள்
வீட்டுச் சுவரில்
தோற்றுவிக்கும் உருவங்கள்
மங்கியநேர மணியோசை
நினைவில் வாழ்வதிர்வு
காற்றில் மண்வாசனை
நீலப்பச்சைத் தும்பி
நட்பாக அருகில்
அன்பின் அதிர்வில்
குழந்தை பூ பறிப்பது
ஒரு கவிதைத் துணுக்கு
விளக்கம் தேவையில்லை
கோயில் வாசலில்
வெயிலில் அலைந்த
குழந்தை ரிப்பன்
மழைக்கு ஒதுங்கிய
அனாதைக் குழந்தைக்கு
வேறு நோக்கமில்லை
மின்னல் வெளிச்சத்தில்
ஒளிர்ந்த தென்னையோலை
நிலவிற்கு முன்
தாவும் வெண்மேகம்
பாயும் காற்றில்
குழந்தையின் புன்னகையோடு
கண்ணகியின் சிலை வேறுவிதம்
என் பார்வையின் கோணத்தில்
ஒரு கண் மூடினால்
உடைந்த சிலையின்
உள் அழகு
ஈரத்தில் வெளியழகு
சின்ன நாய்க்குட்டி
தப்பிப் பாயும்
தருணத்தின் அழகு
தென்னந்தோப்பில் சிரிப்பொலி
காற்றில் பரவும்
எல்லா திசையிலும்
அழுக்குக் குள மூலையில்
தாவும் தவளைக்கு எதிரே
பரவும் சிறு அலைகள்
பணக்கார வீடு
ஒரு பொருட்டல்ல
சுற்றுலா பயணிக்கு
நிழலில் ஒதுங்கும் ஆமை
முதுகு ஓட்டினை மறந்து
எனது கனவு போல
மாலை மங்கும் இரவிற்கு
மறைவில் காத்திருந்த தவளை
தப்பும் பருந்துப் பார்வையில்
இன்றிரவு இந்த நகரம்
நேரம் துரத்தும் காலம்
நிலவு செல்லும் வேகம்
இலக்கில்லாக் காட்டு நாயை
தொடரும் கிழட்டு நரி
ரத்தச் சுவை கற்பனையில்
வரண்ட வயல் எல்லையில்
பசித்த மனிதன் பார்வையில்
சில காசுகள் ஈரமாய் தரையில்
பழைய பாலத்தின் கீழே
காய்ந்த இலை உதிரும்
பனி அடர்த்தியில் தயங்கிபடி
இளமையான தெரு நடனக்காரி
கோடையில் மழைக்கு வேண்டியபடி
உருக்கமாய் எல்லோருக்கும் பொதுவாக
காற்று
ஜூலை 1, 2007திருப்திக்கு மிக அருகில்
ஜூன் 20, 2007நான் இன்று குழந்தைகளிடம் சென்றேன்
ஏன் என்று கேட்டால்
என்னிடம் ஒரு பதில் இல்லை
நான் இன்று குழந்தைகளிடம் கற்றேன்
என்ன என்று கேட்டால்
என்னிடம் ஒரு பதில் உண்டு
என் கேள்வி என் சந்தேகத்திற்கு
மிக அருகில் இருந்தால்
நான் திருப்திக்கு மிக அருகில்
ஏனென்றால்…
மே 29, 2007பயந்து கண்மூடினேன்
சூரிய ஒளிக்கு
கிழிந்த புகைப்படம்
மிதக்கும்
தங்க நீர்வீழ்ச்சியில்
அலையும் மேலெழும்பும்
காற்றுவெளியில்
கண் திறந்தேன்
மலையுச்சி விளிம்பில்
வாழ்வின் கனவுணர்ந்து.
எனது குடுவையில் நிரம்பிய கவிதை வரிகள்
மே 27, 2007ஏற்கனவே சுவற்றில் எழுதிவைத்த
தெரிந்த மேற்கோள்கள் போல
நிலவொளியில் நான் தவறி விழுந்தேன்
ஃபிராய்டின் கனவுலக மொழிபெயர்ப்பு
நான் பேசும் கடந்தகால மொழிபெயர்ப்பு
என் கனவைப் பகிர்ந்து கொள்வேன்
என் கனவு என்பது விளங்கும்வரை
ஓசையில்லாமல் மகிழ்ச்சியை மட்டும் விவரிக்கும்
என் கனவை நிரூபிக்க என்னிடம் ஏதும் இல்லை
என் கனவு என்பது உன்னைத் தொடும்
நீ உன்னைத் தொடுவது போலவே
மறக்க முடியாதபடிக்கு
தருணம்
மே 24, 2007எனது இத்தருணம்
என் விழிப்புணர்வால்
தழுவப்படட்டும்
அத்தழுவல்
சொற்களால் அல்ல
எனக்குக் கிடைக்கும்
உதவியாக
எனக்கு அளித்த பரிசு
எனது இத்தருணம்
கைகளால் பிடிக்கமுடியாத
வழுவழுப்பான
பட்டுத்துணி போல
என் கைவிட்டு
நழுவும்
எனது இத்தருணம்
என் நினைவில்
சிறகடித்துத்
துள்ளி மறையும்
எனது இத்தருணம்
எனது இத்தருணம்
என் சொற்களால்
தழுவப்படட்டும்
அத்தழுவல்
விழிப்புணர்வால் அல்ல
RAM பதிப்பித்தது.
RAM பதிப்பித்தது.
RAM பதிப்பித்தது. 




