செப்டம்பர் 28, 2008
அந்த வண்ணானின் வீடு கழுதை உட்பட எல்லாப் பொருளும் அவன் வாங்கிய கடனுக்கு ஜப்தியாக வேறு ஒருவனுக்குப் போக இருந்தது.
அப்போது, அந்த வண்ணான் தான் ஆசையாக வளர்த்து ஆளாக்கிய கழுதையிடம் சொன்னான், “கழுதையே, நாளை முதல் உனக்கு வேறு எஜமானன், வேறு விதமான வாழ்க்கைச் சூழ்நிலை. எனவே, நீ இனி இங்கிருக்காதே. இந்த இரவு நேரத்தில் எங்காவது ஓடிப் போய்விடு. நான் உனக்கு விடுதலையை உபதேசிக்கிறேன்”
அதற்கு அந்தக் கழுதை , “வேறு எஜமானன், வேறு வாழ்க்கைச் சூழ்நிலை என்றாலும் நான் சுமக்கப் போகும் சுமை என்பது ஒன்றுதான். எனவே, எனக்கு ஒரு மாற்றமும் இல்லை. உனக்குத் தான் விடுதலையின் பொருள் என்பது என்னவென்று விளங்கவில்லை.” என்று சொன்னது.
Leave a Comment » |
கதை |
நிரந்தர பந்தம்
RAM பதிப்பித்தது.
செப்டம்பர் 27, 2008
அந்தத் திருடன் தன் கையில் இருந்த இறைச்சியை வீட்டுக் காவல் நாயை நோக்கி வீசியெறிந்தான். அவன் நோக்கம், அந்த நாய் அதை உண்ணும் வேளையில் வீட்டிற்குள் நுழைந்து திருடுவது தான்.
இறைச்சியை நோக்கி ஓடிவந்த அந்த நாய், அந்த இறைச்சியை முகர்ந்து பார்த்து சப்புக் கொட்டியது. ஆனால், அந்த இறைச்சியை உண்ணவில்லை. அது அந்த திருடனை நோக்கிப் பேசியது, “இந்த இறைச்சி தரும் லாபமும், சுகமும் எனக்குச் சில நிமிடங்களே. இந்த நிமிடங்கள் நான் இவ்வளவு நாள் என்னை வளர்த்த வீட்டுக்காரனுக்கு துரோகம் இழைக்கும் நிமிடங்கள்.
இந்த நிமிடங்கள் கழிந்த பின் நான் வருந்தும் காலம் இந்த நேரத்தை விட மிக அதிகம். எனவே, நான் இதைத் தொட மாட்டேன். நீ யார். உன் தேவை என்ன ? என்று வினவியது.
இந்த அணுகுமுறையில் தோல்வியுற்றத் திருடன் தலை குனிந்து பதில் பேசாமல் மெளனமாக அங்கிருந்து விலகிச் சென்றான்.
Leave a Comment » |
கதை |
நிரந்தர பந்தம்
RAM பதிப்பித்தது.
செப்டம்பர் 23, 2008
முல்லாவின் வீட்டு வாசலில் அந்தப் பறவை மிகவும் அமைதியாக தன் சிறகுகளைத் தன் அலகால் கோதியபடி அமர்ந்திருந்தது.
இதைக் கண்ட முல்லாவிற்கு ஆச்சரியம். இதைப் போன்ற ஒரு பறவையை அவர் கண்டதேயில்லை.
அவர் பல வகையில் யோசித்துப் பார்த்தார். அவரால் ஒரு முடிவிற்கு வர இயலவில்லை.
கடைசியில் அவர் ஒரு யோசனை செய்தார். அதன்படி செயல்படவும் முனைந்தார்.
சத்தமில்லாமல் சென்று அந்தப் பறவையை அமுக்கிப் பிடித்தார்.
பிறகு, அதன் இறக்கைகள் சிலவற்றைப் பிய்த்து எறிந்தார்.
கழுத்துப் பகுதியில் உள்ள சிறகுகளின் அடர்த்தியைக் கத்தரித்துக் குறைத்தார்.
இப்போது அந்தப் பறவை அவருக்கு ஏற்கனவே கண்டறிந்த ஒரு பறவையைப் போல ஆகியிருந்தது.
முல்லா மிக்க மகிழ்ச்சியுடன் அப்பறவையை பறக்க விட்டார்.
Leave a Comment » |
கதை |
நிரந்தர பந்தம்
RAM பதிப்பித்தது.
செப்டம்பர் 19, 2008
அந்த மான் தண்ணீரில் தன் நிழலைப் பார்த்து மகிழ்ந்தபடியே யோசனையில் ஆழ்ந்தது. அதன் கொம்புகள் அதற்கு மிகுந்த மனமகிழ்ச்சியைக் கொடுத்தது. அதன் கொம்புகளின் அழகைப் பார்த்து மகிழ்ந்தபடியே, தன் கால்களைக் கண்டது. ஒல்லியான, குச்சிபோன்ற வடிவிலான அதன் கால்கள் அந்த மானிற்கு மிகுந்த மனக் கஷ்ட்டத்தையும், வெறுப்பையும் அளித்து.
அந்த மான் தன்க்குள் சொல்லிக் கொண்டது, ” சே, என்ன ஒரு கடவுளின் படைப்பு நான். என் கொம்புகள் அழகாகவும், கால்கள் அசிங்கமாகவும் உள்ளனவே”.
அப்போது திடீரெனப் பாய்ந்து வந்தது ஒரு சிங்கம்.
பதறி விரைந்து வேகமாக ஓடியது அந்த மான்.
அதன் வேகமான ஓட்டத்திற்குத் தடையாக அதன் கொம்புகள் காட்டு மரக் கிளைகளில் மாட்டிக் கொண்டு, வேகமாக ஓட விடாமல் தடுத்தன.
இதனால், அந்த மான் சிங்கத்திடம் மாட்டிக் கொண்டு உயிரை விட நேர்ந்த்து.
அந்தக் கடைசிக் கணத்தில் அந்த மான் மனதில் முனகியது,
” ஆபத்தில் உதவிய கால்களைப் பழித்தேன். துன்பத்தில் மாட்டிவிட்ட கொம்புகளைக் கொண்டாடினேன்.”
Leave a Comment » |
கதை | குறிச்சொற்கள்: ஈசாப் கதை |
நிரந்தர பந்தம்
RAM பதிப்பித்தது.
செப்டம்பர் 17, 2008
ஒரு முறை அந்த ராஜா தன் அவையோரிடம் சொன்னார், “நான் இரண்டு நாய் வளர்க்கிறேன்”.
ஒரு நாய் பயமும், கோபமுமாக இருக்கும்.
மற்றது தைரியமும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
இந்த இரண்டு நாய்களும் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றன”.
அவையிலுள்ள ஒருவர் சட்டென கேட்டார், ”சண்டையில் எந்த நாய் ஜெயிக்கும் ?
ராஜா சொன்னார், “நான் சாப்பாடு போட்டு வளர்க்கும் நாய் தான் ஜெயிக்கும்”.
1 மறுமொழி |
கதை |
நிரந்தர பந்தம்
RAM பதிப்பித்தது.
செப்டம்பர் 15, 2008
அந்த முயல் ரத்தச் சகதியில் உயிரை விடும் கோலத்தில் துடித்தபடி இருந்தது.
ஒரு கழுகால் கொத்தி இந்த நிலைமைக்கு ஆளாகியிருந்தது அந்த முயல்.
அப்போது அந்தப் பக்கமாக வந்து, அதைக் கண்ட ஒரு குருவி,
” என்ன முயலே, நீ விரைந்து ஓடுவாயாமே ? காற்றின் வேகம் உன் வேகமாமே ? உன் கால்களுக்கு என்ன ஆச்சு ?” என்று கேலி பேசியது.
இப்படிக் கேலி பேசியபடியே இருந்த குருவி, அதன் பின் பக்கம் ஒரு வல்லூறு வந்ததைக் கவனிக்கவில்லை.
பாதி பேசியபடி இருந்த குருவியை, வல்லூறு சட்டெனத் தூக்கிக் கொண்டு பறந்து போனது.
- ஈசாப் கதையிலிருந்து.
Leave a Comment » |
கதை |
நிரந்தர பந்தம்
RAM பதிப்பித்தது.
செப்டம்பர் 14, 2008
அந்த வீட்டுக்காரனுக்கு தினமும் ஒரு பூனையால் பெரும் தொல்லை ஏற்பட்டபடி இருந்தது. இதனால், அவன் அந்தப் பூனையைப் பிடித்துக் கொல்லும் அளவிற்கு கோபம் கொண்டான்.
ஒரு நாள், அவன் அந்த பூனையை நேருக்கு நேர் சந்திக்கும்படியான சூழ்நிலை உண்டானது. கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், அவன் கையில் கிடைத்தக் கட்டையை எடுத்து அடிக்க ஓங்கினான்.
அப்போது, அந்தப் பூனை அவனிடம், “நண்பா, நான் உன் வீட்டு எலிகளைப் பிடித்து உண்டு உனக்கு உதவினேனே, அதற்கு நீ தரும் பரிசு இது தானா ?” என்று வினவியது.
இந்தக் கேள்வியால் சற்று யோசித்த வீட்டுக்காரன், பின்பு சொன்னான்,
“பூனையே, நீ எலிகளைப் பிடித்து உண்டது எனக்காக அல்ல. உனக்காக. எப்படியென்றால், நீ எலிகளைக் கொன்று, உண்டு, அதன் பின் அடுத்த உணவிற்கு நீ எலிகள் சேர்த்துவைத்த உணவை உண்ணாமல், என் வீட்டு உணவை உண்டது எந்த வகையில் நியாயமானது ?” என்று சொல்லியபடியே, அந்தப் பூனையைக் கொன்று போட்டான்.
- ஈசாப் கதைகளிலிருந்து
Leave a Comment » |
கதை |
நிரந்தர பந்தம்
RAM பதிப்பித்தது.
செப்டம்பர் 13, 2008
அவன் மலை மேல் வளர்ந்த சந்தன மரச் சூழலில் வளர்ந்தவன். தினமும் சந்தன நீரில் குளிப்பவன்.
ஒரு நாள் அவன் மலை மேலிருந்து கீழே இறங்கி வரும்படியான சூழ்நிலை ஏற்பட்டது.
அப்படி ஒரு நாள் அவன் கீழே இறங்கி வந்த போது, தரையில் ஒரு மனிதனைச் சந்தித்தான். அந்த மனிதன் தினமும் பிழைப்புக்குச் சாக்கடையில் குளிப்பவன். அதனால், அவன் பிறகு நல்ல தண்ணீரில் ஒரு முறை குளிக்கும்படி ஆனது அவன் வாழ்க்கை.
இந்த மனிதனைக் கண்டவுடன், மலை மேல் வளர்ந்தவனுக்கு இரு முறை குளிப்பது வியப்பு ஏற்பட்டது.
சாக்கடையில் குளிப்பவனிடம் சந்தனத்தில் குளிப்பவன்
ஏன் இப்படி இரு குளியல் உனக்கு என்று கேட்டான்.
அதற்குச் சாக்கடையில் குளிப்பவன் எப்போதும் ஒரு முறை
நல்ல தண்ணீரில் குளிப்பது தான் சரியானது என்று விளக்கினான்.
இந்த விளக்கத்தால் சந்தனத்தில் குளிப்பவனும் இரு முறை
தினமும் குளிப்பது என்றாகிப் போனது.
1 மறுமொழி |
கதை |
நிரந்தர பந்தம்
RAM பதிப்பித்தது.
செப்டம்பர் 6, 2008

- வானம்
கடந்து செல்லும் படகு
தண்ணீரில் எந்த தடயத்தையும்
விட்டுச்செல்வதில்லை.
பறந்து செல்லும் பறவை
வானில் எந்த சுவடையும்
விட்டுச்செல்வதில்லை.
வெற்றி, தோல்வி,
லாபம் மற்றும் நஷ்டம்
இதயத்தில் எந்த சுவடையும்
ஏற்படுத்துவதில்லை.
விடுதலை குறித்த
மிகப் பெரிய ஞானம்
இதுவே.
- குரு ஷெங்யென்
Leave a Comment » |
கவிதை |
நிரந்தர பந்தம்
RAM பதிப்பித்தது.
செப்டம்பர் 4, 2008
நான் என் பேச்சைக் கேட்பதா ?
கடவுளின் பேச்சைக் கேட்பதா ?
குருவின் பேச்சைக் கேட்பதா ?
காலத்தின் பேச்சைக் கேட்பதா ?
விதியின் பேச்சைக் கேட்பதா ?
உலகின் பேச்சைக் கேட்பதா ?
சூழ்நிலையும் சம்பவமுமே
இதைத் தீர்மானிக்கும்
நான் யாருக்கு அடிமையென்பது.
Leave a Comment » |
கவிதை |
நிரந்தர பந்தம்
RAM பதிப்பித்தது.
செப்டம்பர் 4, 2008
இந்தப் படம் உங்கள் கணிணியின் தோற்றப் பொலிவை மாற்றிவிடும்.
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

சத் சித் ஆனந்தம்
Leave a Comment » |
வாழ்க்கை |
நிரந்தர பந்தம்
RAM பதிப்பித்தது.
செப்டம்பர் 1, 2008

- கற்றுக் கொடுப்பதும் கற்றுக் கொள்வதும்
எல்லாம் தெரிந்தவர் பேசுவதில்லை
பேசுபவர்க்கு எல்லாம் தெரிவதில்லை.
உலகம் எப்படி புரிந்து கொள்கிறது ?
Leave a Comment » |
கவிதை |
நிரந்தர பந்தம்
RAM பதிப்பித்தது.