ஒரு குரு ஆப்பிள் பழத்தைக் காட்டி இது எந்த குடும்பத்தைச் சேர்ந்தது? என்று சீடனைப் பார்த்துக் கேட்டார்
சீடன் சொன்னான் “கனிகளின் குடும்பத்தைச் சேர்ந்தது”.
பையிலிருந்து ஒரு காசை எடுத்து,” இது எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தது? ” என்று கேட்டார் ஆசிரியர்.
“இது உலோகக் குடும்பத்தைச் சேர்ந்தது” என்றான் சீடன்.
“நான் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவன்?” என்றார் குரு.
“காட்டுவாசி அல்லது மிருகக் குடும்பம்” என்று சொல்வது மரியாதை ஆகாது என்று யோசித்த சீடன், தயங்கியபடி சொன்னது,
“நீங்கள் சொர்கத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர்”
அதைக் கேட்ட குரு மகிழ்ந்து, “அந்தக் குடும்பத்தில் இருக்கும் அருகதையை கடவுள் எனக்குக் கொடுக்கட்டும்” என்றார்.
1:42 மு.பகல் இல் மே 7, 2009 |
சொர்க்கம் என்றால் நரகம் என்ற சொல்லின் எதிர்பதமா? சொர்க்கம் என்பதை ஒரு பெண் பெயர் எடுத்துக் கொள்ளலாமா?
இரண்டுமே சுவாரஸ்யம் சேர்க்கிறதே!