நியூசிலாந்து நாட்டில் மாவோரிகள் என்ற ஒரு இனம் உண்டு. இவர்கள் மலைப்பகுதியில் உருளைக்கிழங்கு பயிர் செய்பவர்கள். அங்கே மிகுந்த மழையால் உருளைக்கிழங்கு பயிர் சேதமடைவதுண்டு. எனவே, இந்த இனப் பெண்கள் பயிர் வளரும் காலத்திலே, மழையும், காற்றும் வேகமாக வீசுவதுபோலவும், உருளைக்கிழங்கு பயிர் அதனை எதிர்த்து செழித்து வளர்வது போலவும் ஒரு பாவனையான நடனம் நிகழ்த்துவர்.
இந்த பாவனையும், மனதில் நினைத்த நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்ற வேண்டுகோளும் தான் ஆதிகால மந்திரம்.
இந்தச் செயலில் நடனம் என்ற பொழுதுபோக்கும், பேசாத வேண்டுதல் என்ற ஒரு பிரார்த்தனையும் உண்டு.
மேலும், இச்செயல் ஒரு ஆதிகால மெசேஜ் உள்ள சினிமா !