கவிதைகள்

இங்கே எனக்குப் பிடித்தமான கவிதைகளைத் தொகுக்க உள்ளேன்

மனிதர்கள் -
பணம் குவிக்கக் கடன்படுகிறர்கள்
புகழ் ஈட்ட நாணம் இழக்கிறார்கள்
அதிகாரம் பெற அடிமைகள் ஆகிறார்கள்
உலகை வெல்ல உலகை அழிக்கிறார்கள்
உயிர் வாழ உயிரை விடுகிறார்கள்

- ராஜ் கெளதமன்

====================================================

ஆண்

பெண்

வெறித்தனம்

எல்லாம்

ஆன்மீகத்தில்

அடங்கிவிடும்.

-சுவாமி ஓங்காரநந்தா.

===========================================================

வயிறு பசித்தால்
வாயால் கேட்டிருவேன் – எந்தன்
கண்ணின் பசியால்
கதறினேனே நாள்முழுதும்.

- நாட்டுப்புறக் காதல் திருமணப் பாடல்

===========================================================

எப்பவாவது ஒரு

கொக்கு பறக்கும்

நகருக்கு மேலே என்

கவசமும் வாலும் நீளும்

உருகி ஓடும்

ஊருக்கு வெளியே

-தேவதச்சன்

===========================================================

மறுமொழி இடுக